உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தார். அவருக்கு வயது 73. பழம்பெரும் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனின் மனைவி ஜானகி இரண்டரை ஆண்டுகளாக கிட்னி பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார்.

வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த இவரது உடல்நிலை இரண்டு மாதங்களுக்கு முன் மிகவும் பாதிக்கப்பட்டதால் சென்னை ராமாபுரத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். கணவர் எம்.எஸ்.விஸ்வநாதன் மற்றும் குடும்பத்தினர் அருகிலிருந்து கவனித்துக் கொண்டனர். இசையமைப்பாளர் இளையராஜா உட்பட பல இசையமைப்பாளர்கள் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து சென்றனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 4.10 மணிக்கு, ஜானகி இறந்தார். இவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள வீட்டிற்கு நேற்று மாலை 6 மணிக்கு கொண்டு செல்லப்பட்டது. இவரது உடலுக்கு தென்னிந்திய திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. திரையுலக முக்கியதஸ்கள் பலரும் மலர் அஞ்சலி செலுத்தினர். ஜானகிக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.
.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்