Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



படத்தொகுப்பு.. தமிழ்கிறுக்கன். இத்தாலி

எமது தேசத்தில்  நிலவிய அசாதாரண  சூழ்நிலை கருதி புலம்பெயர்ந்து வந்ந நாம் ஏன் புலம்புகின்றோம்

எங்கள் வெளிநாட்டு வாழ்க்கை வேதனை அல்ல சாதனை. வெளிநாட்டில் உள்ளோர் தகுதியற்றவர் அல்ல பிறருக்கு வாழ்கையை கற்று கொடுப்பவர்கள்

நாம் யார் என்பதையும், எமது இனம் எத்தகையது?
என்பதையும் அடியோடு மறந்துவிட்டுத்தான் இவர்கள் புலம்புகிறார்கள்!     
இலங்கையில் இருக்கும் போது,  எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்!
ஆனால் வெளிநாட்டில் அப்படி இருக்க முடியாது!    இங்கு சில சட்ட திட்டங்கள், வரை முறைகள் இருக்கு! –
சட்டங்களை மதித்து நடப்பது ஒருவனுக்கு கசக்கிறது என்றால், அவனை நாம் மனிதனாகவே ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை!

 இங்குள்ளவர்களிடம் “ எப்படியிருக்கீங்க?” என்று கேட்டால், பலர் பலவகையிலும் புலம்புவதைப் பார்த்திருக்கிறேன்!
” ஐயோ, கஷ்டப்பட்டு உழைக்க வேண்டி இருக்கு!
எவ்வளவு உழைச்சாலும் மிஞ்சுதே இல்லை!
அரசாங்கத்துக்கு வரிகட்ட வேண்டி இருக்கு!
வேலை கிடைக்கவில்லை!
சம்பளம் போதாது” இன்னும் சிலருக்கு வேலை செய்வது கஷ்டமாம்!
குளிருக்கு வெளியே போய் வருவது கஷ்டமாம்!
குனிஞ்சு நிமிர்வதே கஷ்டமாம்!
இப்படி ஏகப்பட்ட புலம்பல்கள்! –
இப்படிப் புலம்பி ஒப்பாரி வைப்பவர்கள் என்ன வெளிநாட்டவரும் மனிதன் தானே

இங்கு பலருடைய பிரச்சனை,இருக்கும் நாட்டு மொழிய கொஞ்சமாவது கற்க வேண்டியதுதானே சும்மா வெட்டி பேச்சு பிறகு ஒரு அரசாங்க அலுவலுக்கோ, அல்லது ஒரு மருத்துவ அலுவலுக்கோ, சுயமாக போய் பேசுபவர்களின் எண்ணிக்கை குறைவு!
தொட்டதுக்கெல்லாம் அடுத்தவனை மொழிபெயர்ப்புக்கு அழைத்துக்கொண்டிருப்பார்கள்! –
புலம்பல்கள் இங்குதான் ஆரம்பிக்கின்றன! –

 நமது உணவுப் பழக்கமே மிகப்பெரிய ஒழுக்கக் கேடுதான்!
தமிழனின் ஆயுள் குறைந்து போவதற்கு முக்கிய காரணமே உணவுப் பழக்கவழக்கம் தான்!
சில நல்ல விஷயங்கள் வெளிநாட்டவரிடம் இருத்து கற்று கொள்ளவேணும் அதில் ஒன்று சாப்பாட்டு முறைகள் உடல் பயிற்சிகள் நாங்கள் எவ் வண்ணம் வேலையும் வீடும் நாடகங்களும் அளவுக்கு மிஞ்சிய சாப்பாடுகள் மூக்கும் வாயும் முட்டும் பிறகு பார்த்தல் செல்லாச்சி பக்கத்தில் எதோ புதினமம் கேள்விபட்டியோ !
உணவுப் பழக்கத்தினால், குண்டாகவும், தொப்பையாகவும் இருந்தால், கண்டிப்பாக எம்மை நோய்கள் தாக்கத்தானே செய்யும்!
அப்புறம் வெளிநாடு கசக்காமல் என்ன செய்யும்? எனக்குத் தெரிஞ்ச தமிழன் வீதிகளில் ரன்னிங் செய்யக் கூடாது என்றோ, அல்லது நன்கு உடல்பயிற்சி செய்யக் கூடாது என்றோ எங்குமே எழுதப்படவில்லை!
ஆனால் எந்தத் தமிழனும் வீதியில் ஓடி நான் பார்த்ததில்லை! நான் வீதியில் ஓடுவதை, சில தமிழர்கள் வேடிக்கை பார்த்தார்கள்!
நான் அவர்களைக் கணக்கெடுப்பதே இல்லை!
உங்களுக்கு நோய் வராமல் என்ன வரும்? சரி சரி நானும் இனி வேலைக்கு ஒடபோகின்றேன் வேலை முடித்த உடன் மிண்டும் வருகின்றேன்

தமிழ் கிறுக்கன்

 

4 Responses to “வெளிநாட்டு வாழ்க்கை………………………”

  • நந்தன்:

    இந்த இடத்தில் நீங்கள் தெரிவித்த கருத்துக்கள் உங்கள் மீது உள்ள மரியாதையை ஒரு படி உயர்த்தி உள்ளது. தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள். உங்கள் எண்ணங்கள் மிகவும் உயர்வாக உள்ளது. இனிமேல் எம்மவர்கள் யாராவது உடற்பயிற்சி செய்யாமல் வருத்தம் வருத்தம் என்று சொன்னால்………….பதில் உங்கள் கட்டுரையில் தெளிவாக உள்ளது.

    • பலெர்மோ-தமிழ் கிறுக்கன்:

      முதல் முதல் எனது வழி காட்டியும் என்ன எழுத வைத்த இணையத்தளம் இது தொடர் பதிவாக நினத்திருத்தேன் நேரம் இன்மை கரணம் நன்றி நந்தன்

      • மனிதன்:

        தமிழ் கிறுக்கன் உங்களிடம் ஒரு வேண்டுகோள்……. எம்மவர்கள் எந்த எந்த நேரத்தில் எல்லாம் உடற்பயிற்சி இலகுவாக செய்யலாம். என்ன செய்யலாம் என்பது பற்றி நீங்கள் இன்னும் தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும். உண்மையில் யோகா போன்ற கொஞ்சம் கஸ்டமானதாக இல்லாமல் அன்றாடம் இலகுவாக செய்யக் கூடிய பயிற்சிகள் பற்றி ஒரு தகவலாக உங்கள் பதிவை இணையத்தில் வெளியிட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது எனது விண்ணப்பம். அதன் பிறகு எம்மவருக்கு வரும் வருத்தங்கள் கொஞ்சமாவது குறையலாம்.

        • பலெர்மோ-தமிழ் கிறுக்கன்:

          உங்கள் கேள்விக்கு நன்றி இதுக்கு நறுக்கேட்டு நாலு வத்தையில் என்பதில்
          1 முடித்தல் விடிய உங்கள் வேலை நேரத்துக்கு முன் ஆளுக்கு வேர்வைகள் இறக்கும் வரைக்கும் ஓடவும் நேரம் ஒரு பிரச்சனைய அப்பிடி என்றால் நான் ஒன்றும் செயமுடியது
          2 ரண்ணிக் செய்தால் வருத்தம் வராது என்று நினைக்க கூடாது எங்கள் சாப்பாட்டு முறைகளும்தான்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்