Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



டுபாயில் உள்நாட்டு வங்கியொன்றின் கடனட்டை (ATM) இயந்திரத்தை உடைத்து அதிலிருந்து 8,000 டுபாய் திர்ஹாம் பணத்தை களவாடியதாக இலங்கை நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

டுபாயின் அல் கோர் பிரதேசத்தில் உள்ள வங்கியொன்றில் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வங்கியின் காவலாளியாகச் செயற்பட்ட 41 வயதான இலங்கை நபரே பணத்தை கொள்ளையிட்டதாக நீதிமன்றில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த கடனட்டை இயந்திரம் செயலிழந்துள்ளதாக அறிந்து கொண்ட வங்கியின் முகாமையாளர் இரு காவலாளிகளை அழைத்து அதனை சரிபார்க்கக் கூறியுள்ளார்.

அந்த கடனட்டை தானியங்கி இயந்தரத்தை காவலாளிகள் திறந்து பார்த்தபோது அதில் 40,000 டுபாய் திர்ஹாம் பணம் இருந்துள்ளது. இயந்திரத்தை சரிசெய்த காவலாளிகள் பணத்தை இயந்திரத்திற்குள் இட்டு பூட்டுவதற்கு மறந்துள்ளனர்.

அதன் பின்னர் ஒரு காவலாளி சிறிது நேரம் கழித்துவந்து இயத்திரத்தை பூட்டியுள்ளார். ஆனால் அதன்போது இயந்தரத்தில் இருந்த பணத்தில் 8000 திர்ஹாம் காணாமல் போயிருந்தது.

உடனே அவர் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்து வங்கி முகாமையாளருக்கு தகவல் வழங்கினார். முகாமையாளர் இரு காவலாளிகளிடம் விசாரணை செய்த போது அவர்கள் பணத்தை எடுக்கவில்லை என்று கூறிவிட்டனர்.

அதனை தொடர்ந்து பாதுகாப்பு கமராவை சோதனை செய்யுமாறு முகாமையாளர் பணித்தபோது பாதுகாப்பு கமரா சேவையில் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் CCTV பதிவை பார்க்குமாறு கோரப்பட்டபோதும் குறித்த நேரத்தில் CCTV பதிவு நிறுத்தப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவ்விடத்திற்கு பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நீதிமன்ற விசாரணையின் போது குற்றவாளியான காவலாளி குற்றத்தை ஒப்புக் கொண்டு பணத்தை திருப்பித் தருவதாக தெரிவித்துள்ளதாக டுபாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்