உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சவூதி இளவரசருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சவூதி இளவரசரான சவுத் அப்துல் அஜிஸ் பின் நாசர் அல் சவுத் தன்னுடய பணியாளரை கொலை செய்த வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தீர்ப்பு வழங்கிய நீதிபதி பீன் கூறுகையில், “ஒரு இளவரசர் தண்டனைக்கு உள்ளாவது வழக்கமாக இல்லாத ஒன்று. சட்டத்துக்கு அப்பாற்பட்டு இந்த நாட்டில் யாருக்கும் இடம் இல்லை.
சவூதி அரச குடும்பத்தை சேர்ந்த ஒருவரான உங்களுக்கு இதை விட கடுமையானதாகவோ அல்லது குறைவாகவோ தண்டனை வழங்குவது எனக்கு தவறான ஒன்றாகும்” என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்