Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்
பாராட்டி வாழ்த்துகின்றோம்

03.04.2012 அன்று மாண்புமிகு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அவர்களின் தலைமையின் கீழ் பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கல்வி நிறுவனத்தின் தேசிய பட்டமளிப்பு விழாவில் “கல்விமானி” பட்டம் பெற்ற மதிப்பிற்குரிய சுப்பிரமணியம் திருகேஸ்வரன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றோம்.

அவரது கல்விச்சேவை மேலும் சிறப்புறவும் ஏற்றமுறவும் வாழ்த்தும்

பணிப்புலம் அரச ஊழியர் அமைப்பு

தகவல்: பகீரதன் அழகரத்தினம் அவர்கள்

16 Responses to ““கலைமானி” பட்டம் பெற்ற கல்விமான் – சுப்பிரமணியம் திருக்கேதீஸ்வரன் அவர்கள்”

 • அரவிந்தன்:

  கல்வியியலில் கலைமாணிப்பட்டம் பெற்றமை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. தாங்கள் மிகவும் வறுமையான சூழலில் கல்வி கற்று முன்னேறியவர். இந்தக்காலம் போல் அந்தக்காலத்தில் யாரும் பாடப்புத்தக பொதிகளோ அல்லது பாடப்புத்தகங்களோ அல்லது கொப்பிகளோ தந்து கௌரவிக்கவில்லை அவ்வாறு கௌரவித்திருந்தால் தாங்கள் அதில் திருப்திகண்டு உங்கள் படிப்பில் ஏதோ உயர்வு கண்டு படிப்பை முடித்துக்கொண்டிருப்பீர்கள். அவ்வாறு கௌரவங்கள் கிடைக்காமல் இருந்ததால் தான் இன்றும் படித்து உயர்ந்துள்ளீர்கள். மேலும் உயர்வதற்கு வாய்ப்பு உண்டு இந்த வாழ்த்துமொழிகளில் மயங்கி தங்கள் படிப்பை இடைவிடாமல் தொடர்ந்து படியுங்கள். உங்கள் பிள்ளைகளும் நீங்கள் படிப்பதை பார்த்து படிப்பார்கள்.

 • அன்புத்தம்பி:

  நந்தன் கூறியது போல் கற்றவர்க்கு எங்குபோனாலும் சிறப்பு உன்மை தான் அவர் அந்த நிலமைக்கு வர எவ்வளவோ கஸ்ரபட்டா ர நான் அறிவேன் அவர் மென்மேலும் வளர ஆண்டவனை வேண்டுகிறேன் அன்புத்தம்பி l

 • precedent marumalarchchi manram:

  எமது மறுமலர்ச்சி மன்ற முன்நாள் நிர்வாக உறுப்பினரான திரு எஸ் திருக்கேஸ்வரன் கல்வி
  மாணிப் பட்டம் பெற்றதையிட்டு வாழ்த்துகின்றோம் மறுமலர்ச்சி மன்றம்

 • Sutha:

  கலைமாமணி திருக்கேஸ் அவர்களிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன். உங்கள் பாதையில் மேலும் பல படித்தவர்கள் சென்று எமது ஊரிற்கு பெருமை பெற்றுத் தருவதுடன் எமது இளையவர்களிற்கும் நல்ல வழிகாட்டியாக இருந்து மேலும் முன்னேற எமது வாழ்த்துக்கள் .

 • பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே:

  “கல்விமாணி” பட்டம் பெற்ற மதிப்பிற்குரிய சுப்பிரமணியம் திருகேஸ்வரன் அவர்களுக்கு, பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே, சார்பாக மனமார்ந்த வாழ்த்துகள். உங்களால் இன்று எங்கள் ஊர் பெருமை கொள்கின்றது.
  நன்றிகள்!
  பண் தமிழ் கலை பண்பாட்டுக்கழகம் நோர்வே.

 • படிக்காதவன்:

  கலைமானி சுப்பிரமணியம் திருகேஸ்வரன் அண்ணாவுக்கு எனது மனப்பபூர்வமான வாழ்த்துக்களை தெரிவிப்பதோடு,நீங்கள் பெற்ற பட்டம் வட்டுக்கோட்டையோடும்,வயல்வெளியோடும்,நின்று விடாமல் எமது கிராமிய சிறர்களோடும் தொடர்வீர்கள்,என்று நினைக்கிறேன்,

 • பலெர்மோ-த.சங்கர்:

  கலைமானி சுப்பிரமணியம் திருகேஸ்வரன் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்.பல கோடி
  உங்கள் சாதனை எதிர்கால ஊர் சந்ததியினருக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டாக அமைவதோடும் ஊருக்குள் இன்னும் பல இளையர்கள் வருவார்களே உருவாக தூண்டுகோலாக அமைவீர்களாக நம்புகின்றேன் தமிழன் என்று சொல்லு தலைநிமிர்த்து நில்லு

 • நெதர்லாந்திலிருந்து சுதர்ஷன்:

  ஊரவர் ஒருவர் இப்பெருமையான அங்கீகாரம் பெற்றதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. குறுகிய காலம் உங்களிடம் கல்வி கற்க சந்தர்ப்பம் கிடைத்திருந்தாலும், நன்றிக்கடனுடன் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்.

  உங்கள் சாதனை எதிர்கால ஊர் சந்ததியினருக்கு ஓர் நல்ல எடுத்துக்காட்டாக அமைவதோடும் ஊருக்குள் இன்னும் பல கல்விமானிகள் உருவாக தூண்டுகோலாக அமைவீர்களாக.

 • நந்தன்:

  கலைமானி பட்டம் எனும் மகுடம் சூடிக் கொண்ட திருக்கேதீஸ் அண்ணாவிற்கு எனது வாழ்த்துக்கள். எம்மவர்கள் கல்வியில் எவ்வளவு துாரம் செல்லலாம் என்று எல்லை காட்டி மற்றவரைம் அத்திசை நோக்கி ஊக்குவிக்கும் தங்களுக்கு மீண்டும் மீ்ண்டும் வாழ்த்துக்கள்.
  ”கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு”

 • சச்சி:

  இத் தகவலை வெளியிட்ட பகீரதன் மேல் எனக்கு சற்று கோபம்,03 -04 -2012 அன்று நிகழ்ந்த இச் சிறப்பு நிகழ்வை மிக தாமதமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறார் அதனால்தான்.

 • yathavan.s:

  கல்விமாணிப் பட்டம் பெற்ற எமது பாடசாலையின் பழைய மாணவனும் வட்டு சுப்பிரமணிய வித்தியாலய அதிபருமான திரு எஸ் திருகேஸ்வரன்அவர்களை எமது பாடசாலை சார்பில் வாழ்த்துகின்றோம்
  பழைய மாணவர் சங்கம்
  சுழிபுரம் வடக்கு ஆறுமுக வித்தியாலயம்

  • சச்சி:

   அண்ணாவை வாழ்த்தவில்லையா யாதவன்.

 • சச்சி:

  எனது ஆருயிர் நண்பர் திருக்கேதீஸ்வரன் அவர்கள் கலைமானி பட்டம் பெற்ற செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி கொண்டேன்.நண்பா நீ மீண்டும் பல பட்டங்கள் பெற்று பெருவாழ்வு வாழ்வாய் என வாழ்த்துகிறேன், உண்மையிலேயே ஆனந்தக்கண்ணீரை வரவைத்துவிட்டாய்.

  • சச்சி:

   உனக்கு நான் நண்பன் என்பதை விட எனக்கு நீ நண்பன் என்பதில் பெருமை அடைகிறேன்.

 • vinothiny pathmanathan:

  வாழ்த்துக்கள் திருக்கேசன் அண்ணா .உங்கள் கலைமானிப் பட்டத்தினால் எங்கள் ஊரும்
  பெருமையடைந்தது. வாழ்த்துக்கள் .

 • Nagendram from Danmark:

  இமயம் தொட முடியாது என்றார்கள்
  இமயம் தொட்டு வந்தான் சாதனையாளன் !

  நிலவிற்கு செல்ல முடியாது என்றார்கள்
  நிலவிற்கு சென்று வந்தான் சாதனையாளன் !

  ஆழ்கடலில் நீந்த முடியாது என்றார்கள்
  ஆழ்கடலில் நீந்தி வந்தான் சாதனையாளன் !

  மனிதன் பறக்க முடியாது என்றார்கள்
  மனிதன் பறந்தான் விமானத்தில் !

  முடியாது என்பது மூடத்தனம்
  முடியும் என்பதே மூலதனம் !

  முடியாது என்பதை முடித்துக் காட்டு
  மண்ணில் நீயே எடுத்துக்காட்டு !

  நடக்காது என்பது அவ நம்பிக்கை
  நடக்கும் என்பதே தன்னம்பிக்கை !

  கிடைக்காது என்பது கோழைத்தனம்
  கிடைக்கும் என்பதே நல்ல குணம் !

  காலம் பொன் போன்றது அல்ல அல்ல
  காலம் பொன்னை விட மேலானது !

  பொன்னை வாங்கலாம் பணத்தால்
  காலத்தை வாங்க இயலாது பணத்தால் !

  ஒவ்வொரு நிமிடத்தையும் பயன்படுத்து
  ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காதே !

  வாய்ப்பு வருமென்று காத்திருக்காதே
  வாய்ப்பை உடன் நீயே உருவாக்கு !

  உந்தன் முதல் எதிரி சோம்பேறித்தனம்
  உன்னிடமிருந்து விரட்டிவிடு அவனை !

  உந்தன் நல்ல நண்பன் சுறுசுறுப்பு
  உன்னிடமே வைத்திடு அவனை !

  நாளை என்று நாளைக் கடத்தாதே
  இன்றே என்றே இனிதே முடித்திடு !

  முயற்சி மூச்சென எப்போதும் இருக்கட்டும்
  தளர்ச்சி தள்ளியே எப்போதும் இருக்கட்டும்

  வெற்றியை நீ தேடிச் செல்ல வேண்டாம்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்