உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாடு கடத்தும் திட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாடு கடத்துவது குறித்து எதிர்வரும் நவம்பர் மாதம் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட வேண்டுமென சுவிஸ் மக்கள் கட்சி வலிறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜெர்மன் போன்ற நாடுகள் சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பை உன்னிப்பாக எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புதிய சட்டத்திற்கு மக்கள் ஆதரவளித்தால் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் சுதந்திரமாக இடம் நகர்வது தொடர்பிலான உரிமை பாதிக்கப்படும் என மற்றுமொரு சாரார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குற்றச் செயல்களில் ஈடுபடும் வெளிநாட்டுப் பிரஜைகளை நாடு கடத்துவதா என்பது தொடர்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் 28ம் திகதி நாடு தழுவிய ரீதியிலான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்