உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் இருதரப்பு ஒப்பந்தம் உருவாகுவதற்கு முன்னின்று பாடுபட்டவரான லியாம் பொக்ஸ் உட்பட பிரித்தானிய கன்சவேர்டிவ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

விசேடமாக யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவப் பிரசன்னம் உட்பட குடாநாட்டின் தற்போதைய நிலைமைகளை கண்காணிப்பதற்காகவே இக்குழுவினர் யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து நேற்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது விடுக்கப்பட்ட இந்த அழைப்புக்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்ததாகவும் அவர் கூறினார். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ விஜயசிங்க உட்பட பலர் அவர்களை சந்தித்திருந்தனரெனவும் ஜனாதிபதியின் ஆலோசகர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களான டேவிட் அமெஸ், குடோ பெப், நிக் டி போய்ஸ், அலுன் கெயன்ஸ், அலன் டங்கன், லியாம் பொக்ஸ், ஷெரில் மறே, ரிச்சார்ட் ஒட்டாவே, அன்ரூரேனர், ஜேம்ஸ் வார்ட்டன் ஆகியோர் வடக்கிலுள்ள பாரிய இராணுவ பிரசன்ன அறிக்கைகள் குறித்து கவலையடைந்துள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்