Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தவர்களை தமது ஹயஸ் வாகனத்தால் மோதி அவர்களை விபத்துக்குள்ளாக்கியதுடன் வீதியில் வைத்தே அவர்களை தாக்கிவிட்டு அவர்களது மோட்டார் சைக்கிளுக்கு மேலால் தமது வாகனத்தை ஏற்றிய கும்பல் ஒன்று தப்பித்துச் சென்ற சம்பவம் நேற்று யாழில் நடைபெற்றுள்ளது.
யாழ். திருநெல்வேலி, பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் நடைபெற்ற இச் சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து பலாலி வீதியால் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இருவரை ஹயஸ் வாகனத்தில் அதே வீதியால் வந்து கொண்டிருந்த 8 பேர் பரமேஸ்வராச் சந்திக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக தமது வாகனத்தினால் மோட்டார் சைக்கிளில் மோதி அவர்களை விபத்திற்குள்ளாக்கிவிட்டு வாகனத்தில் இறங்கி அவர்கள் இருவரையும் தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் குறித்த ஹயஸிற்கு வழிவிடவில்லை என்ற காரணத்தினாலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிய வருகின்றது.

மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தவுடன் ஹயஸையும் அதிலேயே நிறுத்திவிட்டு அதன் சாரதி இறங்கி அவர்கள் இருவருக்கும் சரமாரியாக தாக்குதல் நடாத்திய வேளை மற்றைய 7 பேரும் இறங்கி அவர்களும் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை துரத்தித் துரத்தி அடித்தனர். அது மட்டுமல்ல அவர்களுக்கு அடிப்பதற்கு பக்கத்தில் இருந்த இரும்பு ஒன்றினையும் கழற்ற முயற்சி செய்தனர்.

இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டு விட்டு அனைவரும் ஹயஸில் எறிச் சென்றுவிட்டனர். அப்போது யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த பொலிஸார் அவர்களை பின் தொடர்ந்து துரத்திச் சென்றதாகவும் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி தெரியாது எனவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

ஹயஸில் வந்தவர்கள் அனைவரும் பார்ப்பதற்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் போல தெரியவில்லை என்றும் தெரிவித்தனர்.

அதேவேளை மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டதுடன் குறித்த மோட்டார் சைக்கிளும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

இப்படியாக துணிந்து வீதியில் இறங்கி பயமில்லாமல் 8 பேரும் இவ்வளவும் செய்கிறார்கள் என்றால் இராணுவத்திற்கோ அல்லது பொலிஸிற்கோ தொடர்புடையவர்கள் தான் என பிரதேச மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் உண்மை என்றும் தமக்கு இது தொடர்பான மேலதிக தகவலை வழங்க அனுமதி இல்லையென்றும் கூறினர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்