உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிங்கப்பூரில் சர்வதேச இந்திய திரைப்பட விழா நடந்தது. இதில் இந்திய மொழிப்படங்கள் திரையிடப்பட்டன. நடிகர் கமலஹாசனின் விஸ்வரூபம் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. நேற்று சிறந்த இந்திய படங்கள் மற்றும் நடிகர்- நடிகைகள் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.

இதில் சிறந்த நடிகர் விருது ரன்பீர் கபூருக்கு வழங்கப்பட்டது (படம்: ராக் ஸ்டார்), சிறந்த நடிகையாக வித்யா பாலன் (படம்: தி டர்டி பிக்சர்) தேர்வு செய்யப்பட்டார். சிறந்த படம்: ஜிந்தகி நமிலேங்கி தோபரா (இந்தி) சிந்த இயக்குனர்: ஜோயா அக்தர் (படம்: ஜிந்தகி ந மிலேங்கி தோபரா) சிறந்த துணை நடிகர்: பர்கான் அக்தர் (படம்: ஜிந்தகி ந மிலேங்கி தோபரா) சிறந்த துணை நடிகை: பரிநீதி சோப்ரா (படம்: லேடிஸ் வெர்சஸ் ரிக்கி பால்). ஏ.ஆர். ரகுமானுக்கு சிறந்த இசை அமைப்பாளர் விருது கிடைத்துள்ளது.

ராக் ஸ்டார் (இந்தி) படத்துக்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. சிறந்த வில்லன் நடிகர் விருது சிங்கம் தமிழ்ப்படத்தில் நடித்த பிரகாஷ்ராஜூக்கு கிடைத்தது. சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை ரிதேஷ் தேஷ்முக் பெற்றார் (படம்: டபுள் தாமல்) சிறந்த பாடகர்: மோகித் சவுகான் (படம்: ராக் ஸ்டார்) சிறந்த பாடகி: ஸ்ரேயா கோசல் (படம்: பாடிகார்டு) சிறந்த பாடல் ஆசிரியர்: இர்ஷத் கமில் (படம்: ராக் ஸ்டார்) பழம்பெரும் நடிகை ரேகாவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

நடிகர் கமலஹாசன், ஆலிவுட் நடிகர்- தயாரிப்பாளர் பேரி ஒஸ்போர்னே ஆகியோர் விருதுகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியில் நடிகர்கள் பிரபுதேவா, ஷாகித் கபூர், ரன்பீர் கபூர், அவரது தந்தை ரிஷிகபூர், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோர் பங்கேற்ற கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்