உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்பெரு நாட்டில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் வெளிநாட்டினர் உள்பட 14 பேர் பலியாயினர். பெரு நாட்டில், சில சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்றில் அமேசான் பகுதியினை சுற்றி பார்த்துவிட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது தென்‌கிழக்கே, ஏன்டஸ் நகரில் மமரோசா என்ற மலைப்பகுதியில்‌ மோதிய விபத்தில் 14 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் தென்கொரியாவைச் சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

கடும் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக பெரு அரசு தெரிவித்துள்ளது. மமரோசா பகுதி போலீசார் கூறுகையில், விபத்து நடந்த பகுதி சுமார் 16,000 அடி உயரத்தில் உள்ளதால் மீட்புப்பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்