Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கந்தர்மடம் சந்தியில் அமைந்துள்ள யாழ் போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சை நிபுணர் ஜெயக்குமாரின் வீடு சேதமாக்கப்பட்ட சம்பவம் நடந்து ஒருவாரம் செல்வதற்கு முன்னர் அப்பகுதியில் மற்றுமொரு பீதியான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியரின் வீட்டில் இருந்து சுமார் 100 மீற்றர் தூதரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது நேற்று இரவு 11 மணியளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் வைத்தியர் வீட்டில் வீசியது போன்ற கழிவெண்ணையை இந்த வீட்டிலும் வீசி சேதமாக்கியுள்ளனர்.

இதனால் வீட்டு ஜன்னல் உடைந்துள்ளதுடன் பாடசாலை செல்லும் மாணவர் ஒருவரின் புத்தகம், சீருடைய உள்ளிட்ட உடைமைகளுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், வைத்தியர் வீட்டு சம்பவத்தை திசைதிருப்பவே இவ்வாறு அருகில் உள்ள வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

நேற்று (16) இரவு மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஊடகவியலாளர் ஒருவரின் வீடே சேதமாகியுள்ளது.

வைத்தியர் வீட்டில் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக யாழ், பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் பெரேரா நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சொல்லி வாய் மூடுவதற்கு முன்னர் அடுத்த சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த ஊடகவியலாளரின் வீட்டுக்கு அருகில் மற்றுமொரு வைத்தியரின் வீடு இருப்பதாகவும் கடந்த வாரம் யாழ். போதான வைத்தியசாலையில் இடம்பெற்ற பணிப்பகிஷ்கலிப்பில் இந்த வைத்தியர் பங்குபற்றியிருந்ததாகவும் பொலிஸார் தெரிக்கின்றனர்.

ஒருவேளை குறித்த வைத்தியரின் வீட்டின் மீது கழிவெண்ணை வீசி தாக்க வந்தவர்கள் வீடு மாறி அருகில் உள்ள வீட்டின் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்