Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சென்சார் சான்றிதழ் ஒரு படத்தை எப்படி கூறுபோடும் என்பதற்கு பில்லா 2 சிறந்த உதாரணம்.

சென்சாருக்கு செல்வதற்கு முன்புவரை பில்லா 2 தான் பெ‌ரிய படம். அதிக வசூல் செய்யும் படமாகவும் அதாகவே இருக்கும் என நம்பப்பட்டது. பில்லா 2க்கு போட்டிகாகக் கூட சகுனி படத்தை யாரும் கருதவில்லை. ஆனால் சென்சார் பில்லா 2வுக்கு ஏ சான்றிதழ் வழங்கிய பிறகு அனைத்தும் தலைகீழாக மாறியது. விநியோகஸ்தர்கள் விலையை குறைத்துக் கொண்டனர். தெலுங்கு உ‌ரிமை கூட சகுனிக்கு அடுத்த இடத்தைதான் பிடித்திருக்கிறது. பில்லா 2வை விட அதிக தொகைக்கு சகுனி தெலுங்கில் விற்பனையாகியிருக்கிறது.

ஏ என்பதை யு/ஏ என்று மாற்றினால் தவிர எதிர்பார்த்த லாபம் கிடைக்காது என்ற நிலையில் சென்சார் சொன்ன சில காட்சிகளை படத்திலிருந்து நீக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த டிங்க‌ரிங் வொர்க் காரணமாக இந்த மாதம் 21 ஆம் தேதி வெளியாவதாக இருந்த படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்