Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அரியானா மாநிலத்தில் 70 அடி ஆழ்துளை கிணற்றில், தவறி வழுந்த சிறுமி மகியை கண்டுபிடித்து மீட்கும் பணியில் ராணுவ வீரர்களும் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
அரியானா மாநிலம் மானேசர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 4வயது சிறுமி மகி, கடந்த புதன் அன்று(20.6.2012) பிறந்த நாளன்று 70 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்து விட்டாள்.

இந்த தகவல் அறிந்த மீட்பு படையினர், மீட்பு பணி முயற்சியில் ஈடுபட்டனர். இதில் ராணுவ வீரர்களும் உதவி புரிந்தனர்.

இந்நிலையில் 80 மணி ‌‌‌‌நேர போராட்டத்திற்கு பின் சிறுமி மகி மீட்கப்படுகிறாள். மீட்கப்படும் மகிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவ குழு தயாராக இருக்கிறது.

இந்நிலையில் மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சிறுமி சிக்கியுள்ள பள்ளத்திலிருந்து அருகாமையில் இராணுவத்தினர் தோண்டியுள்ள பள்ளத்திற்கு சிறுமியை கொண்டு செல்ல ஒரு சிறிய சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

தற்போது அதன் சுற்றளவு மிகவும் குறுகியதாக இருப்பதாலும் ஓக்சிஜன் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மூச்சுவிட முடியாத சூழ்நிலையில் அந்த இடம் இருப்பதால் மிகவும் மெதுவாகவே சிறுமியை மீட்டுக்கொண்டிருக்கிறார்கள் இராணுவ ஜவான்கள்.

இந்த தாமதம் அப்பகுதி மக்களை மிகவும் வருத்தத்தில் மூழ்கடித்துள்ளது

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்