Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சுழிபுரம் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலய 14வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு கூடைப்பந்து வீராங்கனைகள் 12 பேருக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் பல்வேறு உபகரணங்களை வழங்கியுள்ளார்.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலய 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவு கூடைப்பந்தாட்ட அணியினர் மாகாணரீதியில் 2ஆம் இடத்தினைப் பெற்று தேசிய மட்டத்திற்கு செல்லவுள்ள 12 வீராங்கனைகளுக்கு கடந்த திங்கட்கிழமைசப்பாத்துக்களை வாங்கிக் கொள்வதற்கான பணஉதவிகளையும், அவர்களுக்குரிய ஜேசிகளையும் பாடசாலையில் வைத்து வழங்கினார்.

இத்துடன் தேசிய மட்டத்தில் விளையாடுவதற்காக கொழும்பு செல்லவிருக்கும் இவர்களுக்கு வாகன வசதிகளை தானே ஏற்பாடு செய்வதாகவும் அத்துடன் நாடாளுமன்றம் உட்பட வேறு பல முக்கிய இடங்களையும் பார்வையிடுவதற்கு ஏற்பாடுகளைச் செய்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் உறுதியளித்துள்ளார்.

அத்துடன் பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாலய விளையாட்டு மைதானம் தொடர்பில் உரியவர்களுடன் கலந்துரையாடி அதில் உள்ள பிரச்சினையினை வெகு விரைவில் தீர்பபதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்