உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்மலேசியாவின் பிரைக்பீல்ட்ஸ் பகுதியில் இலங்கை அகதிகளின் நலன் திட்டத்திற்காக நிதி சேகரித்துக் கொண்டிருந்த மலேசியாவின் மக்கள் நீதி கட்சி உறுப்பினர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த நபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் நீதி கட்சி தகவல் துறை பிரதானி எம்.எஸ்.அர்ஜுனன் முகத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் பல தடவைகள் குத்தித் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட அர்ஜூனன் பங்சார் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு அனுமதித்தபோது முகத்தில் நான்கு தையல்கள் போடப்பட்டதாக அவருடைய மகனான கலைமுகிலன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பங்சார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய தினம் அர்ஜுனனும் அவரது மகனான கலைமுகிலனும் இலங்கை தமிழ் அகதிகளுக்காக நிதி சேகரித்துக் கொண்டிருந்த போது கலைமுகிலன் தனது நண்பரை சந்திக்கவென ஹோட்டல் ஒன்றுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

அதன்போது தனது தந்தை உதவிகுரல் எழுப்பியதும் அவர் திரும்பி வந்துள்ளார். வந்து பார்க்கும்போது தந்தையின் முகத்தில் இரத்தம் கொட்டியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்து தாக்கிய நபர்கள் உடனடியாக அவ்விடத்தை விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இத்தாக்குதல் அரசியல் நோக்கத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கலைமுகிலன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்