உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளினால் சிறைச்சாலை அதிகாரிகள் மூவர் பணய கைதிகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அரசியல் கைதிகளில் மூவர் கடந்த செவ்வாய்க்கிழமை பூஸா பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, அவர்களை மீண்டும் வவுனியா சிறைக்கு கொண்டுவர வேண்டும் எனக் கோரி தமிழ் சிறைக்கைதிகள் நேற்று முன்தினம் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது கோரிக்கை வலுப்படுத்தும் நோக்கிலேயே சிறைச்சாலை அதிகாரிகள் மூவரை தாம் பணய கைதிகளாக வைத்திருப்பதாக அங்குள்ள சிறைக் கைதி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

தாம் நேற்று முன்தினத்தில் இருந்து உணவு பகிஸ்கரிப்பை மேற்கொண்டு வரும் நிலையில், நேற்றைய தினம் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரினால் பலவந்தப்படுத்தி உணவு உட்கொள்ள பணித்தாக தெரிவித்தார். இதன்போது வன்முறைச் சம்பவங்களும் இடம்பெற்று்ள்ளது. இச்சம்வத்தினால் சில அரசியல் கைதிகள் படுகாயத்திற்கு உள்ளாகியுள்தாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் தம்மால் சிறைப்படுத்தப்பட்ட அதிகாரிகளை தமது இருப்பிடத்தில் பாதுகாப்பாக வைத்திருப்பதாவும் தெரிவித்தார். இந்த பதற்றமான சூழ்நிலையை அடுத்து சிறைக்காவலர்களை மீட்கும் நோக்கடனும், சிறைச்சாலையில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் வவுனியா சிறைச்சாலை நிர்வாகம் தற்போது நீதிமன்றத்தின் உதவியை நாடியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்