தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்


இரண்டாயிரம் நவ இரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கிக்கொண்டு சென்னை சென்ற இலங்கையர்!

சுமார் இரண்டாயிரம் நவ இரத்தினக் கற்களை வயிற்றுக்குள் விழுங்கிக்கொண்டு கொழும்பில் இருந்து விமானம் மூலம் இந்தியாவின் சென்னை மாநகரத்தை வந்தடைந்த இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பில் இருந்து புறப்பட்டு வந்திருந்த பயணிகளை விமான நிலையத்தில் வைத்துப் பொலிஸார் சோதனை செய்தனர்.

முஹமது சபீக் என்பவர் மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இவரை சோதனை செய்தபோது சந்தேகம் வலு ஆனது.

வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பரிசோதித்தனர். ஸ்கான் செய்து பார்த்தபோது வயிற்றுக்குள் நவரத்தினக் கற்கள் இருப்பது தெரிந்தது. மருத்துவ முறையில் அவை வெளியில் எடுக்கப்பட்டன.

சுமார் இரண்டாயிரம் நவரத்தினக கற்கள் வரை இருக்கும். ஒவ்வொன்றும் இந்திய பெறுமதியில் ஒன்றரை கோடி ரூபாய். இவர் கூலிக்காக இக்கற்களை கடத்தி வந்திருக்கின்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்