Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



பெற்று வளர்த்த 6 வயது மகளை விஷம் வைத்து கொல்ல முயற்சித்த தாய் ஒருவர் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

கொலன்ன – சூரியகந்த – ஏக்பர்ன் தோட்டத்தில் வசிக்கும் தாய் ஒருவர் தனது 6 வயது மகளுக்கு கடந்த 4ம் திகதி இரவு விஷம் கொடுத்த கொல்ல முயற்சித்துள்ளார்.

கணவருடன் ஏற்பட்ட பிரச்சினையால் தாய் மகளுக்கு விஷம் வைத்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த சிறுமிக்கு விஷம் வழங்கிய பின்னர் அவர் சூரியகந்த தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தாயிடம் விசாரணை நடத்திய வைத்தியர் விஷம் கொடுக்கப்பட்டுள்ளதை கேட்டறிந்துள்ளார்.

அதன் பின்னர் உடனடியாக பொலிஸாருக்கு சம்பவத்தை அறிவித்த வைத்தியர் சிறுமியை இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றினார்.

சிறுமி உயிர்பிழைத்து தற்போது சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நேற்று (05) எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவர் எதிர்வரும் 19ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொலொன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்