உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்சிறைச்சாலை அதிகாரிகளின் பிடியில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட கைதி ஒருவர் மீது சிறைச்சாலை அதிகாரிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து ஹோமாகம நீதவான் நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட வேளை குறித்த சந்தேகநபர் தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இன்று பகல் 12 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் காயமடைந்த கைதி தற்போது ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

மேலதிக விசாரணைகளை ஹோமாகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்