Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



ஜம்மு- காஷ்மீரில் அமர்நாத் யாத்திரீகர்களுடன் சென்ற அரசு பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 15 பேர் பலியாயினர். 18 பேர் காயடைந்தனர்.

ஜம்மு பள்ளத்தாக்கிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று ரம்பான் மாவட்டத்தின் டிக்தூல்- நல்லாஹ் மலைப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்திற்குள்ளானது.

இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 18 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்குவந்த மீட்புப்படையினர் 14 பேரின் உடல்களை மீட்டனர்.

காயமடைந்தவர்கள் ஜி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இவ்விபத்து குறித்து ரம்பான் மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டு அனில் மகோத்ரா கூறுகையில், இவர்கள் அமர்நாத் யாத்திரைக்கு செல்ல இருந்ததாக தெரிவித்தார்.

எனினும் அதற்கான ஆவணங்கள் உள்ளனவா என விசார‌ணை நடக்கிறது. மேலும் காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்