உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்புசல்லாவ – நுவரெலியா வீதியில் அமைந்துள்ள ஆடை வியாபார நிலையத்தில் நேற்று இரவு 11.10 அளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து புசல்லாவ பொலிஸார் பிரதேசவாசிகளின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். தீ விபத்தால் எவருக்கும் எவ்வித சேதமும் எற்படவில்லை.

ஆனால் வியாபார நிலையத்திற்கும் ஆடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

புசல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்