உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


தமிழ் பேசும் நீதிபதிகளுக்கு நாட்டில் தட்டுப்பாடு நிலவுவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். சுமார் 75 தமிழ் பேசும் நீதிபதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனாலேயே, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களை விசாரிப்பதற்கான செயற்பாடுகள் தாமதமடைகின்றன என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

நீதிபதிகளின் தட்டுப்பாடு தொடர்பில் நீதிச் சேவை ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி புதிய நீதிபதிகளை நியமிக்க அமைச்சு தீர்மானித்துள்ளது எனவும் புதிதாக சுமார் 90 நீதிபதிகளை நியமிப்பதற்கான அமைச்சரவை அனுமதியினை பெறுவதற்கான அமைச்சரவை பத்திரத்தை விரைவில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்தார்.

புதிய நீதிபதிகளின் நியமனத்தின் ஊடாக, விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களின் விசாரணைகளை துரிதப்படுத்த முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலை புலிகள் இயக்க சந்தேக நபர்களை விசாரிப்பதற்காக வெலிக்கடை சிறைச்சாலையினுள் புதிதாக நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

அத்துடன் விடுதலை புலிகள் சந்தேக நபர்களை விசாரிப்பதற்காக மன்னார் வவுனியா, ஆகிய பிரதேசங்களில் நீதிமன்றங்களின் அமைக்கப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் மிக விரைவில் குறித்த நீதிமன்றங்கள் செயற்பட ஆரம்பிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்