Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



மட்டகளப்பு கல்லடியில் விமானப் படையினரின் வாகனம் மோதி குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு சுமார் 8.30 அளவில் கல்லடி, சிவானந்தா தேசிய பாடசாலைக் முன்பாகவுள்ள யு வளைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அம்பாறையில் இருந்து மட்டக்களப்பு நோக்கச் சென்ற விமானப் படையினரின் வாகனம் துவிச்சக்கரவண்டியில் இருந்து இறங்கி வீதியை கடக்க முனைந்தபோது பாதசாரி மீது மோதியுள்ளது.

இந்த சம்பவத்தில் நொச்சிமுனையை சேர்ந்த குடும்பஸ்தரான பாலசிங்கம் ஜெகநாதன் என்பவரே உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் குறித்த வாகனத்தை செலுத்திவந்த விமானப் படையை சேர்ந்த கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகனமும் காத்தான்குடி பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பிலான விசாரணையை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்