உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தமிழ்நாடு – திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து ஒரு இலங்கை தமிழ் அகதியும் அவரது இரு பிள்ளைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வறண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் இம்மூன்று சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கை அகதியான 35 வயதுடைய கலைச்செல்வி, அவருடைய 12 வயதுடைய மகன் வினோத் மற்றும் 7 வயதுடைய மகன் கௌதம் ஆகியோரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இம்மூவரும் கொலை செய்யப்பட்டார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்