Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படும் 41 பேர் வென்னப்புவ பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக வென்னப்புவ பிரதேசத்திலுள்ள ஹோட்டலொன்றில் தங்கியிருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

37 தமிழர்களும் 4 முஸ்லிம்களுமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களெனவும் இவர்கள் திருகோணமலை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்களிடமிருந்து கையடக்கத் தொலைபேசிகள், பணம், பயணப் பைகள் ஆகியனவும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் இன்று திங்கட்கிழமை வென்னப்புவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்