தமிழில் எழுத
பிரிவுகள்


சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயற்சித்த மேலும் 26 பேர் நேற்று (06) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு – வாழைச்சேனையில் இருந்து 10-15 கடல் மைல் தூரத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கமான்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா செல்ல பயன்படுத்தப்பட்ட 2 படகுகளையும் கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்