தமிழில் எழுத
பிரிவுகள்


கினிகத்தேனை, தியகலைப் பகுதியில் எரிபொருள் கொள்கலன் ஒன்று 15 அடி ஆழமான பள்ளத்தில் நேற்று திங்கிழமை இரவு வீழ்ந்துள்ளதாகவும் இதனால் கசிந்துவரும் எண்ணெய் மஹாவலி ஆற்றில் கலந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு, முத்துராஜவலையிலிருந்து கொட்டகலைக்கு 33,000 லீற்றர் டீசலை ஏற்றிவந்த இந்தக் கொள்கலன் பள்ளத்தில் வீழ்ந்ததன் காரணமாக சுமார் 15,000 லீற்றர் டீசல் கசிந்துள்ளன.

இது மஹாவலி ஆற்றில் கலப்பதை தடுப்பதற்கான நடவடிக்கையை பொலிஸாரும் இராணுவத்தினரும் பெற்றோலிய கூட்டுத்தாபன அதிகாரிகளும் மேற்கொண்டுள்ளதாகவும் கினிகத்தேனை பொலிஸார் கூறினர்.

அத்துடன், இக்கொள்கலனின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்