உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்பகலவன் கதைதான் யோஹன் படத்துக்கும் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஏன்..?

இந்தக் கேள்விக்கு இன்னும் ச‌ரியான விடை கிடைக்கவில்லை. ஆனால் ஆருடமாகச் சொல்வதே அதிரடியாக இருக்கிறது.

சீமான் கொஞ்ச நாள் விஜய்யை வைத்து பகலவன் படத்தை இயக்குறேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். முதலில் இதனை ஆமோதித்த விஜய் அதன் பிறகு வாயே திறக்கவில்லை. விஜ‌ய், பகலவன் என்று கொஞ்ச நாள் சொல்லிப் பார்த்துவிட்டு சீமானே ஒருநாள் விஜய் பகலவனில் நடிக்கவில்லை என்றார். இதே கதைதான் இப்போது யோஹனுக்கும் என்கிறார்கள்.

யோஹனைப் பற்றி முதலில் உற்சாகமாக பேசிக் கொண்டிருந்த விஜய் இப்போது வாயே திறப்பதில்லை. கௌதம் மட்டும் தினம் ஒரு சேதி சொல்லி வருகிறார். அடுத்த மாதம் துப்பாக்கி வேலைகள் முடிகின்றன. அதையடுத்து தாண்டவம் விஜய் இயக்கத்தில் நடிக்கப் போகிறாராம் விஜய். இதனை உறுதியாகச் சொல்லி வருகிறது இயக்குனர் விஜய் தரப்பு. சந்திர பிரகாஷ் தயா‌ரிக்கும் இப்படத்தின் வேலைகள் நவம்ப‌ரில் தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன. அப்படியானால் யோஹன்..?

இதுவரைக்கும் விடை தெ‌ரியவில்லை.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்