தமிழில் எழுத
பிரிவுகள்
புதிய செய்திகள்
தமிழ் பெயர்கள்



யாழ் மேல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய
டெல்ருக்ஷனின் இறுதி நிகழ்வுகள் மத அனுட்டானங்கள், இரங்கலுரைகள், பெருமளவு மக்கள் கலந்துகொண்ட இறுதி ஊர்வலம் என்பவற்றுடன் அவரது சொந்த ஊராகிய யாழ்ப்பாணம் பாஷையூரில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

இதற்கு பொலிஸார் பலத்த பாதுகாப்பு வழங்கியிருந்தனர்.

றாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலத்திற்கு மேலாகக் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வந்தபோது டெல்ருக்ஷன் இரு தினங்களுக்கு முன்னர் மரணமடைந்தார்.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றையடுத்து, அங்கிருந்த தமிழ் அரசியல் கைதிகள் சிறைக்காவலர்களினால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும், அவர்களில் சிலர் கைகால் முறிந்த நிலையில் றாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் அவர்களில் கணேசன் நிமலரூபன் மற்றும் மரியதாஸ் நேவிஸ் டெல்ருக்ஷன் ஆகிய இருவரும் வேண்டுமென்றே அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் பல தரப்பினரும் குற்றம் சுமத்தியிருக்கின்றனர்.

இது தொடர்பில் சிறப்பு விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், இத்தகைய மரணங்களைத் தடுப்பதற்குத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை எழுந்துள்ளது என்றும் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டு உரையாற்றிய பலரும் தெரிவித்துள்ளனர்.

டெல்ருக்ஷனின் இறுதிக்கிரியைகளில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய முன்னணி, தமிழர்விடுதலைக்கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
foto 1 ME in Pretty Pink Roses Dreams - 2zxD0-CQgi - print Untitled-1 Celine_Birthday nnd-1
வாசகர்கள்


  • பாகுபலி வசனம்: "தெரியாமல் செய்த செயல்"
    இந்த குறிப்பிட்ட வசனத்தை சாதியை இழிவுபடுத்தும் நோக்கில் எழுதவில்லை என்கிறார் பாகுபலி திரைப்படத்தின் வசனகர்த்தாவான மதன் கார்க்கி. அப்படி ஒரு சாதியினர் இருப்பதே தனக்குத் தெரியாது என்றும் கூறுகிறார்.
  • பாகுபலி வசனம்: "சாதிசொல்லித்திட்டும் வசைச்சொல்"
    பாகுபலியில் கதாநாயகன் பேசும் “பகடை” என்கிற வார்த்தை வசவு அருந்ததியர்களின் ஒரு பிரிவினரை அவமானப்படுத்தும் விதத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்கிறார் இந்த திரைப்படத்தை எதிர்க்கும் அமைப்புகளில் ஒன்றான புரட்சிப்புலிகள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் திலீபன்
  • பாகுபலி வசனம்: அறியாமையா? அவமதிப்பா?
    இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கும் பாகுபலி திரைப்படத்தில் அருந்ததியர்களின் ஒரு பிரிவினரை அவமதிக்கும் வசனங்கள் இருப்பதாகக் கூறும் எதிர்ப்பாளர்கள் மற்றும் திரைப்படத்தின் வசனகர்த்தா மதன் கார்க்கியின் தன்னிலை விளக்கம் ஆகிய இருதரப்பு வாதங்களும்
  • ஆப்பிரிக்காவுக்கான ஒபாமாவின் செய்தி - காணொளி
    கென்யாவுக்கான விஜயம், கிழக்கு ஆப்பிரிக்காவின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் அமெரிக்காவின் கரிசனையை காண்பிப்பதாக அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
  • மலேரியாவுக்கு எதிரான தடுப்பு மருந்து - காணொளி
    மலேரியாவுக்கான தடுப்பு மருந்து ஒன்று ஆப்பிரிக்காவில் பயன்படுத்தப்படுவதற்கான முக்கியமான ஒரு கட்டத்தை தற்போது கடந்துள்ளது.
  • கியூபா மாறினாலும் அதன் அரச பத்திரிகை ''கிரான்மா'' மாறவில்லை- காணொளி
    கியூபா மாறினாலும், அதன் அரசாங்கத்தின் ஊதுகுழலான ''கிரான்மா'' பத்திரிகை இன்னமும் மாறவில்லை. அது குறித்த காணொளி.
  • பாகுபலி: சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க முடிவு
    பாகுபலி திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய வசனம் குறிப்பிட்ட சாதியினரை இழிவு செய்யும் வசவு என தெரியாமல் எழுதியதாகவும் அது சிலரை கேவலமாக சித்தரிப்பதாக எதிர்ப்பு எழுந்திருப்பதைத் தொடர்ந்து அந்த வசனம் நீக்கப்படுமென அதன் வசனகர்த்தா மதன் கார்க்கி தெரிவித்துள்ளார்
  • பாட்டொன்று கேட்டேன்: 27 ஆம் பாகம்
    சாமானியப் பின்னணியிலிருந்து வந்து, தமிழ்த் திரைத்துறையில் மெல்லிசையை அறிமுகப்படுத்தி, ஐந்து இந்திய மொழிகளில் 1,700 திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆறு தலைமுறைகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த எம்எஸ்வி குறித்து சம்பத்குமாரின் பெட்டகத்தொடர்
  • பாட்டொன்று கேட்டேன்: 26 ஆம் பாகம்
    சாமானியப் பின்னணியிலிருந்து வந்து, தமிழ்த் திரைத்துறையில் மெல்லிசையை அறிமுகப்படுத்தி, ஐந்து இந்திய மொழிகளில் 1,700 திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆறு தலைமுறைகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த எம்எஸ்வி குறித்து சம்பத்குமாரின் பெட்டகத்தொடர்
  • பாட்டொன்று கேட்டேன்: 25 ஆம் பாகம்
    சாமானியப் பின்னணியிலிருந்து வந்து, தமிழ்த் திரைத்துறையில் மெல்லிசையை அறிமுகப்படுத்தி, ஐந்து இந்திய மொழிகளில் 1,700 திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆறு தலைமுறைகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த எம்எஸ்வி குறித்து சம்பத்குமாரின் பெட்டகத்தொடர்
முந்தைய செய்திகள்