உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


சுவீடனில் வெளிநாட்டவருக்கு எதிராக நடைபெறும் துப்பாக்கிச் சூடுகள் முடிந்துவிட்டதாக போலீசார் தப்புக்கணக்குப் போட, நேற்றிரவு சுமார் 21.30 மணியளவில் மறுபடியும் ஓர் அநாமதேய துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. வெளிநாட்டவர் அதிகமாக வாழும் மல்ம்உய் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பும் இடத்தை அண்டி இந்தத் துப்பாக்கிப் பிரயோகம் நடாத்தப்பட்டது. ஏற்கெனவே இப்பகுதியில் வாழும் வெளிநாட்டவரில் பலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். பெண்மணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இதுவரை சுமார் இருபது துப்பாக்கிப் பிரயோகங்கள் வரை நடைபெற்றுள்ளன. அனைத்தும் ஒரே துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட சன்னங்களாகவே உள்ளதாகக் கூறும் சுவீடிஸ் போலீசார் வெளிநாட்டவரை இரவு நேரங்களில் அவதானமாக உலவும்படி கேட்டுள்ளனர். அப்படி அவதானமாக நடக்கலாமென எண்ணி வீட்டுக்குள் இருந்த இரண்டு பெண்கள் மீது கண்ணாடி ஜன்னல் வழியாக சுடப்பட்ட சம்பவமும் நடைபெற்றுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்