உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்ஐந்து வயது சிறுமி மண் வெட்டியினால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட அகோரச் சம்பவமொன்று மாத்தறை – வெலிகமை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

5 வயதுடைய பாத்திமா அப்ரா என்ற சிறுமியே நேற்று (14) மாலை இவ்வாறு வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி பிரிதொரு சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த போதே அப்பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் சிறுமியை மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்த பின்னர் சடலத்தை வயலொன்றுக்குள் வீசியுள்ளார்.

இதைக் கண்ட மற்றைய சிறுமி ஓடிச் சென்று சம்பவத்தை வீட்டில் கூறியதையடுத்தே ஊர் மக்களால் சடலம் மீட்கப்பட்டது.

சந்தேகநபரை பிடித்த ஊர் மக்கள், அவரை தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னரே சந்தேகநபர் கொழும்பிலிருந்து வெலிகமையிலுள்ள தனது வீட்டிற்கு வந்துள்ளார். இவர் மனநிலை பாதிக்கப்பட்டவரெனக் கூறப்படுகிறது. வெலிகமை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்