உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்6 கிலோ 900 கிராம் கேரள கஞ்சாவுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நுரைச்சோலை முஸ்லிம் பள்ளிவாயலுக்கு அருகில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலுக்கு அமைய கல்பிட்டி – முகத்துவாரம் கடற்பகுதில் இருந்து 34 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கேரள கஞ்சா விநியோகிப்பவர் என தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் குறித்து பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்