Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



அமெரிக்காவில் நேற்று இடம்பெற்ற இடைத் தேர்தலில் அரச அதிபர் பராக் ஒபாமாவின் சனநாயகக் கட்சி பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதால், ஒபாமா இரண்டாவது தடவையாகவும் அரச அதிபர் பதவிக்கு வருவது கேள்விக்குறியாகி இருக்கின்றது. நடந்து முடிந்த இடைத் தேர்தல் ஒபாமா தலைமையிலான ஆளும் கட்சிக்கு உறுதியான செய்தி ஒன்றை அனுப்பி இருப்பதாக எதிர்க்கட்சியினர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரதிநிதிகள் சபையில் (காங்கிரஸ்) பெரும்பான்மையை இழந்ததன்மூலம் சட்டம் இயற்றுவது உட்பட முக்கிய முடிவுகளை எடுக்கும்போது குடியரசுக் கட்சியின் ஆதரவைப் பெற வேண்டிய நிலைக்கு ஒபாமா தள்ளப்பட்டுள்ளார்.
பிரதிநிதிகள் சபையை மீறி தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் அமெரிக்க அரச அதிபர் என்ற அடிப்படையில் ஒபாமாவிற்கு இருக்கின்ற போதிலும், அவ்வாறு செயற்படுவது அமெரிக்க அரசியலுக்கு இழுக்காக அமையும்.
நேற்று நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 435 பேரைக்கொண்ட பிரதிநிதிகள் சபையில் (காங்கிரஸ் சபை) குடியரசுக் கட்சி 239 ஆசனங்களையும், சனநாயகக் கட்சி 184 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளன.
100 பேரையுடைய செனட் சபையில் 37 பேரைத் தெரிவு செய்வதற்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் ஒபாமாவின் சனநாயகக் கட்சி மொத்தம் 51 ஆசனங்களைப் பெற்று பெரும் பிரயத்தனத்துடன் வெற்றி பெற்றுள்ளது. குடியரசுக் கட்சி 46 ஆசனங்களை செனட் சபையில் பெற்றுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 37 மாநிலங்களுக்கான ஆளுநர்களைத் தெரிவு செய்வதற்காகவும் நேற்று அமெரிக்க மக்கள் இடைத் தேர்தலில் வாக்களித்திருந்தனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்