Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



நயன்தாராவுக்கு சென்னை ரோடு ஏழு வருட பரிச்சயம். 2005-ல் ஐயா, சந்திரமுகி, கஜினி படங்கள் மூலம் பிரபலமாகி இங்கேயே தங்கினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அவருக்கு நிரந்தரமாக ரூம் இருந்தது. அங்கிருந்தே ஏவி.எம். ஸ்டூடியோ மற்றும் சென்னையை ஒட்டி நடந்த படப்பிடிப்புகளுக்கு சென்று வந்தார்.

தெலுங்கில் பிசியான பிறகு ஐதராபாத் செல்ல நேர்ந்தது. அதன்பிறகு சென்னை, ஐதராபாத், கேரளா என சுற்றிக் கொண்டு இருக்கிறார். சென்னை நகரம் பற்றி நயன்தாரா சொல்கிறார்:-

சென்னையில் நான் நிறைய நேரங்களை செலவிட்டு உள்ளேன். இங்குள்ள பரபரப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனாலும் சில குறைகளும் உள்ளன. சென்னையில் உள்ள சாலைகள் சரியாக அமைக்கப்படவில்லை. பொதுமக்கள் நடந்து செல்லவும், வண்டிகளை ஓட்டிச் செல்லவும் கஷ்டப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில் ரோடுகள் மிகவும் மோசமாகி விடுகிறது.

ரோடுகளை சீரமைத்து, சாக்கடை கால்வாய் அடைப்புகளை சரி செய்தால் ரோடுகளில் தண்ணீர் நிற்காது. இந்த குறைகளை தவிர சென்னையை விரும்புவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது. வரும் ஆண்டுகளில் சென்னையை சுத்தமான, பசுமையான நகரமாக பார்க்க நான் ஆசைப்படுகிறேன்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்