உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அவிசாவளை, கெந்தலவத்தையில் இருந்து தெரணியாகல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் விபத்துக்குள்ளானதில் 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 04.45 மணி அளவில் மியனவிட்ட பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் 21 பயணிகள் பயணித்ததாக தெரணியாகல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்த 17 பேர் தெரனியாகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை தெரணியகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்