உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான்குளம் பிரதான வீதியில் பஸ் ஒன்று பாதையைவிட்டு விலகி விபத்துக்குள்ளானதில் குறைந்தப்பட்சம் 14 பேர் காயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு- கல்முனை வீதியில் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்வண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் அவர்களில் 9 பேர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக ஆரையம்பதி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ரமேஸ் தெரிவித்தார்.

இதேவேளை, ஆரையம்பதி வைத்தியசாலையில் 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்