உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கோழிப் பிரியாணி

தேவையான பொருட்கள்

கோழிக்கறி – 1/2 கிலோ
அரிசி – 1/2 கிலோ
எண்ணெய் – தேவையான அளவு
முந்திரி – 8
வெங்காயம் – 1/2 கிலோ
தக்காளி 1/2 கிலோ
பூண்டு
இஞ்சி
புதினா கொத்தமல்லி
கறுவ
கராம்பு
ஏலக்காய்
உப்பு
பச்சைமிளகாய் மஞ்சள்தூள்

கோழி பிரியானி செய்யும் முறை

பெரிய சட்டியில் எண்ணெய் ஊற்றி  கராம்பு,கறுவ இலை, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், புதினா, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கிக்கொள்ளவும்.

சுத்தம் செய்த கோழிக்கறியை அதில் போட்டு தேவையான அளவிற்கு மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறவும்.

இப்போது தேவையான தண்ணீரை அதில் ஊற்றி கொதிக்கவிட்டு, பின்பு கழுவி சுத்தம் செய்த அரிசியை அதில் போட்டு சட்டியை மூடவும்.

அரிசி முக்கால் பாகம் வேகும் அளவிற்கு நேரத்தை கணித்துக் கொள்ளவும்.

அரிசி முக்கால் பாகம் வெந்ததும் சட்டியை திறந்து கிளறி, எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விடவும்அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியையும்,போடவும்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்