உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அம்பாறை மாவட்டம் கல்முனையில் உள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி அலுவலகத்தின் மீது நள்ளிரவு இனந்தெரியாத சிலரினால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கட்சிப் பிரமுகர்களும் நேற்றிரவு தமது பிரச்சாரப் பணிகளை முடித்து விட்டு நற்பிட்டிமுனையிலுள்ள அலுவலகத்திற்கு வந்து கலந்தரையாடியதன் பின்னர் மாவை எம்.பி ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயமே இச் சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இத் தாக்குதலில் அலுவலகத்தின் ஜன்னல் கண்ணாடி சேதத்திற்குள்ளானதுடன் சேனாதிராசா எம்.பியின் வாகனத்தின் மீதும் கல் பட்டு கீறல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத் தாக்குதல் இடம்பெற்ற சமயம் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவுடன் வேட்பாளர்களும், கட்சி முக்கியஸ்தர்களும் இருந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்