உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்தமிழகத்தின் சிவகாசியில் முதலிப்பட்டி எனும் பகுதியிலுள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் இன்று பகல் 12 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் குறைந்தபட்சம் 50 பேர் உயிரிழந்தனர். சிவகாசியில் முதலிப்பட்டி எனும் பகுதியிலுள்ள ஓம்சக்தி பட்டாசு ஆலையில் இன்று பகல் 12 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் 50 பேர் உயிரிழந்தனர்.

தீ விபத்து நேரிட்டதும், அதனை வேடிக்கை பார்க்கவும், பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் வந்த பொதுமக்கள் பலரும் இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டதால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்த தீ விபத்தில் சிக்கி பலியானவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பேரின் உடல்கள் முன்னதாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டன. எனவே இந்த விபத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்து மருத்துவனையில் சேர்க்கப்பட்டவர்களில் சிலர் மரணமடைந்ததை அடுத்து பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

பட்டாசு தயாரிக்க ரசாயனங்களை கலந்த போது ஏற்பட்ட உராய்வில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், ஆலை முழுவதும் பட்டாசுகளும், ரசாயனங்களும் நிறைந்து இருந்தால் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதாகவும் செய்தியாளர் கூறியுள்ளார்.

தற்போதும் பட்டாசுகள் வெடித்த வண்ணம் இருப்பதால் மீட்புப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் தீயணைப்பு வீரர்கள் சிரமப்படுவதாகவும், இதில் மேலும் பலர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் பட்டாசு ஆலை முழுவதும் எரிந்து தீக்கிரையானது. பட்டாசு வெடிபொருட்கள் வெடித்துச் சிதறியதில் சுமார் 40 அறைகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகியுள்ளன. இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து வந்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

One Response to “சிவகாசி பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து 50க்கும் மேற்பட்டோர் பேர் பலி!”

  • Kumar putthiran Italynalla:

    என் தமிழ் உறவுகளுக்கு மரணம் அடைந்த தமிழ் நட்டு சகோதரம் களுக்கு எனது எனது கண்ணிற் அன்சலிய கல் அவர்களின் அட்ம சாந்தி அடை ய இறைவன பிரதிகின்ரன்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்