உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


லட்சுமிராய் சினிமாவுக்கு வந்து பல ஆண்டுகளாகி விட்டது. ஆனால் சினிமாவில் இன்னமும் அவருக்கென்று ஒரு இடம் கிடைக்கவில்லை. என்றாலும், கிரிக்கெட் வீரர் டோனி உள்பட அவ்வப்போது யாருடனாவது கிசுகிசுக்கப்படுவதால், தொடர்ந்து அவரது பெயர் சினிமா மற்றும் ரசிகர் வட்டாரங்களில் உச்சரிக்கப்பட்டுக்கொண்டேயிருககிறது.

இப்படியாக சினிமாவில் அவர் தன்னை தக்க வைத்துக்கொண்டு வந்த நேரம்தான், காஞ்சனா படத்தில் நாயகியாக லட்சுமிராயை நடிக்க வைத்தார் லாரன்ஸ். அந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றதால், அதன்பிறகு அஜித்தின் மங்காத்தா, விக்ரமின் தாண்டவம் உள்பட சில பெரிய நடிகர்களின் படங்களில் இடம்பிடித்தார் நடிகை. ஆனாலும், தனி கதாநாயகியாக அவரை நம்பி யாருமே சான்ஸ் தருவதாக தெரியவில்லை.

அதனால் மீண்டும் காஞ்சனா படத்தை தந்த லாரன்சை துரத்துகிறார். அடுத்து அவர் காஞ்சனா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும வேலைகளில் ஈடுபட்டிருப்பதால், அந்த படத்திலும் எப்படியாவது இடம் பிடித்து விட வேண்டும் என்று திரைக்குப்பின்னால் லாரன்சை துரத்திக்கொண்டே திரிகிறார் லட்சுமிராய்.

இந்த முறை படத்தை பெரிய பட்ஜெட்டில் பல மொழிகளிலும் எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டு வரும் லாரன்ஸ், லட்சுமிராய்க்கு இதுவரை சாதகமான பதிலை சொல்லவில்லை. ஆனால் அவரோ, லாரன்சின் புதிய படத்தில் நான்தான் நாயகி என்று வெளியில் பப்ளிசிட்டி செய்து வருகிறார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்