உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


கர்ணனின் எதிர்பாராத வெற்றியால் ஒரு டஜன் எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்கள் மீண்டும் பிரமாண்ட விளம்பரங்களுடன் வெளியாக காத்திருக்கின்றன. சில படங்களில் டிஜிட்டலில் புத்துணர்ச்சி பெற்று வருகின்றன.
சிவாஜி கணேசனின் திருவிளையாடல் படம் தமிழகத்தை உலுக்கிய ஒன்று. எண்பது தொண்ணூறுகளில் இந்தப் படத்தின் கதை, வசன கேசட்டுகள் ஒலிக்காத திருமணங்கள் இல்லை. வசனம் பலருக்கும் இன்றும் அத்துப்படி.
திருவிளையாடல் படத்தை மீண்டும் வெளியடும் முயற்சியில் இருக்கிறார் இப்படத்தின் உரிமையை வைத்திருக்கும் சிஎம் பரமசிவன். இவர் திருவிளையாடலை இயக்கிய ஏபி நாகராஜனின் மகன்.
நித்யானந்தா போன்ற கார்ப்பரேட் சாமியார்களால் கொஞ்சம் மந்தமாகிப் போன தமிழகத்தின் பக்தி மார்க்கத்தை இந்தப் படம் தட்டி எழுப்ப வாய்ப்புள்ளது. சிவாஜியின் நிச்சய ஹிட் படங்களில் ஒன்றான இது வெளியானால் கர்ணன் வசூலை தாண்டிச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்