உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்மலையாள நடிகர் திலகன் 77, உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.
திரையுலகில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட திரைபடங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் திலகன் நடித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடலநலக்குறைவு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். மலையாள திரையுலகில் திலகன் நடிக்க தடை விதிக்கப்பட்டிருந்த போதும் சிறு சிறு நாடகங்களில் நடித்து வந்தார்.

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமீப நாட்களில் நடிகர் மம்மூட்டி உட்பட முக்கிய நடிகர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர்.

கொலிவுட்டில் திலகன் சத்ரியன், மேட்டுக்குடி, ஆயுதபூஜை, உள்ளிட்ட படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர். மறைந்த திலகனுக்கு மலையாள திரைப்படத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்