உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இலங்கையில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்திச் சென்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை சுங்கத்துறையினர் சென்னை விமானநிலையத்தில் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து இந்திய ரூ.38 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு கொழும்பில் இருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்றது.

இந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அதிகாரிகள் பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

இலங்கை கண்டி பகுதியைச் சேர்ந்த காஜாமொய்தீன் (வயது 57), அவரது மனைவி சம்சூன்பீவி (52) ஆகியோரிடம் சந்தேகத்தின்பேரில் தனி அறையில் வைத்து சோதனை நடத்தினர்.

அவர்கள் அணிந்திருந்த கோட்டில் மறைத்து வைத்திருந்த 900 கிராம் தங்கத்தகடுகளை கைப்பற்றினர். மேலும், அதே விமானத்தில் கண்டியில் இருந்து வந்த மற்றொரு பயணி மெபிலாபாத்திமா (32) என்பவரிடம் இருந்து 220 கிராம் தங்கத்தை சுங்கத்துறையினர் கைப்பற்றினர்.

3 பேரும் சுற்றுலா விசாவில் தமிழகம் வந்தது விசாரணையில் தெரிய வந்தது. 3 பேரையும் கைது செய்த பொலிஸார், அவர்களிடம் இருந்து மொத்தம் 1 கிலோ 120 கிராம் எடையுள்ள தங்கம் கைப்பற்றினார்கள். இதன் மதிப்பு இந்திய ரூ.38 லட்சத்து 72 ஆயிரம் இருக்கும். மேலும் விசாரணை நடக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்