Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



கத்திரிக்காய் பிரியாணி

தேவையானப் பொருட்கள்

அரிசி – 2 கப்

கத்திரிக்காய் – கால் கிலோ

பெரிய வெங்காயம் – 4

தக்காளி – கால் கிலோ

பச்சை மிளகாய் – 5

தயிர் – 2 ஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்

தேங்காய்பால் – 1/2 கப்

சோம்பு – 1/2 ஸ்பூன்

கறுவ – 1

கராம்பு – 1

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்

மல்லித்தூள் – 3 ஸ்பூன்

கடலைப்பருப்பு – 50 கிராம்

முந்திரி – 10 கிராம்

எண்ணெய் – தேவையான அளவு

நெய் – 50 கிராம்

கறிவேப்பிலை – 1 பிடி

உப்பு – தேவையான அளவு

செய்முறை:

அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, சோம்பு, கறுவ, கராம்பு, ஏலக்காய் போட்டு தாளித்து அத்தனுடன் இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி அதனுடன் கத்திரிக்காய் (நீளவாக்கில் நறுக்கவும்) போட்டு நன்கு வதக்கவும்.

கத்திரிக்காய் வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கியவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் தயிர், தேங்காய்பால் ஊற்றி வதக்கி அரிசியையும் போட்டு நன்கு கிளறவும்.

கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும்,நெய் ஊற்றி கொத்தமல்லி தூவி சட்டியை மூடி வைத்து 5 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.

சிறிது நேரம் கழித்து சட்டியை திறந்து முந்திரி, கடலைப்பருப்பு (வறுக்கவும்) போட்டு சாதம் குளையாமல் கிளறி பரிமாறைலாம்.

சுவையான கத்தரிக்காய் பிரியாணி தயார்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்