உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்இயக்குனர் முருகதாஸ் தயாரிக்கப் போகும் படத்தில், கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார் பிரபல இசை அமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்

இயக்குனர் முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ராஜசேகர். இவர் புதிதாக முதன்முதலாக இயக்கப் போகும் திரைப்படம் இசையை மையமாகக் கொண்டுள்ள திரைப்படம். இந்த திரைப்படத்தில் நடிக்க இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷை அணுகியுள்ளார். ஜிவி பிரகாஷும் சம்மதம் தெரிவித்து விட, இப்போது ராஜசேகர் இயக்கப் போகும் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது.

படத்தில் இரண்டு கதாநாயகர்கள் என்றும், இதில் ஒருவர் ஜிவி பிரகாஷ் என்றும் கூறியுள்ள ராஜசேகர் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல கதாநாயகர் ஒருவர் நடிப்பார் என்றும் கூறியுள்ளார். இசையை மையமாகக் கொண்டு எடுக்கப் படும் படம் என்பதால் ஒரு இசை அமைப்பாலரையே வைத்து படம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று தாம் எண்ணியதாகவும் கூறியுள்ளார். கண்டிப்பாக இசையைப் பற்றிய கதையில் ஒரு இசை அமைப்பாளரின் உதவி அதிகமாக தேவைப்படும் என்பதும் இந்த அறிமுக இயக்குனரின் கருத்தாக உள்ளது.

படம் இப்போதுதான் திட்டமிடலில் ஆரம்பித்து உள்ளதால், இன்னமும் நடிகைகள், படத்தின் பெயர் என்று எதுவும் முடிவாகவில்லை. என்றாலும் கண்டிப்பாக இசை ஜிவி பிரகாஷ் தான் என்று சொல்கிறார். ஏற்கனவே நான் படத்தில் இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்து படம் வெற்றியடைந்தது குறிப்பிடத் தக்கது.

இதே வேளை இயக்குனர் எஸ்ஜெ.சூர்யா இசையை மையமாக வைத்து ஒரு படம் இயக்கி வருவதும் குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்