உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்70 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டுப் பணத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நால்வரும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களிடம் இருந்து 54,800 அமெரிக்க டொல்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் கட்டார் வழியாக மொசம்பியாவிற்கு செல்லவிருந்ததாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் பேருவளை பிரதேச மாணிக்கக் கல் வியாபாரிகள் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்