உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்யாழ். மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழுள்ள அனைத்து பிரதேச சபைகளில் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லூர் பிரதேச சபைத் தலைவர் தாக்கப்பட்மையை கண்டித்தும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியுமே இந்த போராட்டம் நடைபெற்றது.

பிரதேச சபைகளின் முன்பாக “வடக்கு கிழக்கு தமிழர் தாயகம்”, “அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “எமது நிலம் எமக்கு வேண்டும்”, “மக்கள் ஆட்சியை மதித்து நட” போன்ற சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் இடம்பெற்றது.

இந்தப் போராட்டம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழுள்ள வேலணை, நெடுந்தீவு மற்றும் ஊர்காவல்துறை ஆகிய பிரதேச சபைகளை தவிர அனைத்து பிரதேச சபைகளிலும் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பகிரங்கமாக அழைப்பு விடுத்த போதிலும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை என பிரதேச சபை தவிசாளர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்