Warning: count(): Parameter must be an array or an object that implements Countable in /customers/e/3/3/panipulam.net/httpd.www/wp-includes/post-template.php on line 284
உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்



சுன்னாகம் நகரப் பகுதியில் பொருள்கள் இறக்கிக் கொண்டு நின்ற லொறியுடன் பின்புறமாக வந்த இரண்டு வாகனங்கள் மோதியதில் மூன்று வாகனங்களும் சேதம் அடைந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் இடம் பெற்றது.

காங்கேசன்துறை வீதியில் யாழ்ப்பாணம் நோக்கிய வண்ணம் நின்றலொறி ஒன்றில் பொருள்களை இறக்கிக்கொண்டு இருந்தனர். லொறியின் பின்னால் மற்றுமொரு படி வாகனம் சற்று தள்ளி நின்றது.

யாழ்ப்பாணம் நோக்கி வந்த கார் ஒன்று படி வாகனத்தின் பின்புறம் அடித்து தள்ளியதில் படி வாகனம் முன்னால் நின்ற லொறியுடன் மோதுண்டது .இதனைத் தொடர்ந்து மூன்று வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் மூன்று வாகனங்களும் சேதத்துக்கு உள்ளாகின.

சுன்னாகம் சந்தியில் போக்குவரத்து ஒழுங்கு நடவடிக்கையை மேற் கொண்ட பொலிஸார் விபத்தை பார்வையிட்டதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்