உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்
தமிழ் பெயர்கள்அமெரிக்காவில் மாமியாரை கொலை செய்த குற்றத்திற்காக கர்ப்பிணி மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் யூபா நகரில் வசிப்பவர் பல்ஜிந்தர் கவுர்(வயது 37).

இவருக்கும், இவரது மாமியாரான பால்ஜித் கவுருக்கும் (வயது 68) கடந்த 24ஆம் திகதி தகராறு ஏற்பட்டது.

இதனையடுத்து தலையில் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பால்ஜித் கவுர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவருடைய உடலை பிரேத பரிசோதனை செய்ததில் தீ வைத்து அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதை பொலிசார் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில் ஆறு மாத கர்ப்பிணியான பல்ஜிந்தர் கவுர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு ஐந்து வயது மகள் இருக்கிறாள். இந்த வழக்கு விசாரணை நாளை நடக்கிறது.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்