உங்கள் கருத்து
தமிழில் எழுத
பிரிவுகள்


இலங்கை இறுதிப் போரில் தமிழ் மக்களைக் காப்பாற்ற ஐக்கிய நாடுகள் சபை தவறிவிட்டது என்ற ஐ.நாவின் சார்லஸ் பெட்ரியின் கருத்தை ஏற்பதாக பொதுச்செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

இலங்கை இறுதிப் போரின் போது ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக சாலர்ஸ் பெட்ரியை அறிக்கை தாக்கல் செய்ய ஐ.நா. உத்தரவிட்டிருந்தது.

இந்த அறிக்கையின் சில பகுதிகள் வெளியாகி இருந்த நிலையில் முழு அறிக்கையும் நேற்று பான் கி மூனிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதை வெளியிட்ட பிறகு கருத்து தெரிவித்துள்ள பான் கி மூன், தமது உள்ளக குழு ஆராய்ந்து வெளியிட்ட அறிக்கையில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை ஏற்றுக் கொள்கிறோம்.

இறுதி யுத்த காலப்பகுதியில் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபை தமது பொறுப்புகளை சரிவர செயல்படுத்தவில்லை. இதனை ஐக்கிய நாடுகள் சபை ஒரு பாடமாக கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் ஐக்கிய நாடுகள் சபை மீதான நம்பிக்கை இழக்காமல் இருக்க ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

விளம்பரங்கள்
பிறந்தநாள் வாழ்த்து
முந்தைய செய்திகள்